சரக்கு ஏற்றுமதியில் தமிழ்நாடு 3ம் இடம்
இந்தியாவில் இருந்து அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பெட்ரோலிய பொருட்கள், மருந்து, ஜவுளி, நகை, எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதில், மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி 2026ம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையான 8 மாதங்களில் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒட்டுமொத்தமாக 30 லட்சத்து 26 ஆயிரத்து 478 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளன.

இதில் 4 லட்சத்து 8 ஆயிரத்து 173 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகளுடன் 13.49 சதவீத பங்களிப்புடன் ஒட்டுமொத்த சரக்கு ஏற்றுமதியில் இந்தியா அளவில் தமிழ்நாடு 3ம் இடம் பிடித்துள்ளது.
மாநிலங்களின் சரக்கு ஏற்றுமதி (ஜனவரி – ஆகஸ்ட் 2026)
1. குஜராத் – ரூ. 8,24,397 கோடி (27.24 சதவீதம்)
2. மராட்டியம் – ரூ. 4,70,654 கோடி (15.55 சதவீதம்)
3. தமிழ்நாடு – ரூ. 4,08,173 கோடி (13.49 சதவீதம்)
4. கர்நாடகா – ரூ. 2,34,983 கோடி (7.76 சதவீதம்)
5. உத்தரபிரதேசம் – ரூ. 1,52,591 கோடி (5.04 சதவீதம்)







