• November 21, 2026

நிலுவை வழக்குகளை விரைந்து  முடிக்க நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதிகள் நியமனம்

 நிலுவை வழக்குகளை விரைந்து  முடிக்க நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதிகள் நியமனம்

தமிழகத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கும், மாவட்ட நீதிமன்றங்களின் வழக்கு நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பிறப்பித்துள்ளார். இந்தப் புதிய நியமனங்கள் வரும் நவம்பர் 23ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.

தென் மாவட்டங்களுக்கான பொறுப்பு நீதிபதிகள் விவரம்:

*திருநெல்வேலி மாவட்டம்: நீதிபதிகள் தண்டபாணி மற்றும் கோவிந்தராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

*தூத்துக்குடி மாவட்டம்: நீதிபதிகள் ஹேமந்த் சந்தன்கவுடர் மற்றும் சுமதி ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

*தென்காசி மாவட்டம்: நீதிபதி விக்டோரியா கவுரி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் மாவட்டங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் முன்னேற்றத்தைக் கண்காணித்து, வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவது இந்த நியமனங்களின் முக்கிய நோக்கமாகும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *