தூத்துக்குடி மாவட்டத்தில் 12 போலீசாருக்கு பணியிட மாற்றம்
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் நிர்வாக நலன் கருதி, தனிப்பிரிவில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் (SSI) மற்றும் தலைமைக் காவலர்கள் உள்ளிட்ட 12 பேரைப் பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. தனிப்பிரிவில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வந்தவர்கள் மற்றும் விருப்பப் பணியிட மாறுதல் கோரியவர்கள் இந்தப் பணியிட மாற்றத்தில் இடம்பெற்றுள்ளனர்.

பணியிட மாற்ற விவரங்கள் வருமாறு:-
1. தூத்துக்குடி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு எஸ்.எஸ்.ஐ. சுப்பிரமணியன் – கோவில்பட்டி தனிப்பிரிவு.
2. கோவில்பட்டி தனிப்பிரிவு எஸ்.எஸ்.ஐ. சேர்மராஜ் – புதுக்கோட்டை காவல் நிலையம்.
3. தாளமுத்துநகர் தலைமைக் காவலர் முருகேசன் – புதுக்கோட்டை காவல் நிலைய தனிப்பிரிவு.
4. பசுவந்தனை ஜார்ஜ் கலைச்செல்வன் – எட்டயபுரம்.
5. தட்டப்பாறை ராஜா – தென்பாகம் காவல் நிலையம்.
6. குளத்தூர் அந்தோணி செல்வன் – திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையம்.
7. புதுக்கோட்டை தலைமைக் காவலர் ரவிக்குமார் – தெர்மல் நகர் காவல் நிலையம்.
8. முறப்பநாடு ராம்குமார் – தூத்துக்குடி தலைமையிடம்.
9. குளத்தூர் பொன்குமார் – தருவைகுளம்.
10. தென்பாகம் ஜான்சன் – தாளமுத்துநகர் காவல் நிலையம்.
11. எட்டயபுரம் அருணாசலம் – ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையம்.
12. புதூர் முனியசாமி – குளத்தூர் காவல் நிலையம்.







