கோவில்பட்டியில் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மகளிர் கிளை தொடக்கம்
Oplus_16908288

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (த.மு.எ.க.ச.) கோவில்பட்டி கிளையின் மகளிர் கிளை தொடக்க விழா மையம் ஓவியப் பள்ளியில் நடைபெற்றது.
தூத்துக்குடி மகளிர் கிளை தலைவர் வாலண்டினா தலைமை தாங்கினார். எழுத்தாளர் ராஜலட்சுமி நாராயணசாமி வரவேற்றார். தூத்துக்குடி மகளிர் கிளைச் செயலாளர் சண்முகவடிவு புதிய கிளைப் பொறுப்பாளர்களை முன்மொழிந்தார்.

தலைவராக ராஜலட்சுமி நாராயணசாமி, செயலாளராக மணிமொழி நங்கை, பொருளாளராக கவிதா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைத் தலைவராக மீனா, துணைச் செயலாளராக ஜெயா ஜனார்தனன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக சு. கண்ணகி, செ. ஸ்ருதி, ஜோதிலட்சுமி, சியாமளா, முருகேஸ்வரி, சிவசங்கரி, மீனாட்சி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
த.மு.எ.க.ச. கோவில்பட்டி கிளை பொருளாளர் வேலுசாமி, மாநிலக் குழு உறுப்பினர் இராமசுப்பு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
‘தமிழ் இலக்கியத்தில் பெண் எழுத்தாளர்கள்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் உதயசங்கர் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள் இராமலட்சுமி, சேர்மக்கனி, வனிதா, உமா, திருக்குடும்பமேரி, கலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழா முடிவில் புதிய கிளையின் செயலாளர் மணிமொழி நங்கை நன்றி கூறினார்.







