• November 23, 2026

நாமக்கல் முட்டை இறக்குமதிக்கு ஓமன் நாட்டில்  தடை 

 நாமக்கல் முட்டை இறக்குமதிக்கு ஓமன் நாட்டில்  தடை 

நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை உள்பட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இதில் 8 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு நாள்தோறும் 7 கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது. இவை தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும் 

வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், பறவை காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக நாமக்கல் முட்டை இறக்குமதிக்கு ஓமன் முழுமையாக தடை விதித்துள்ளதால்,முட்டை இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் கோழிப்பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாமக்கல்லில் 6 கோடி 

முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.

இதுகுறித்து, நாமக்கல் கால்நடை மற்றும் விவசாய பண்ணையாளர்கள், வர்த்தகர்கள் சங்க தலைவர் கூறுகையில் நாமக்கல் பகுதியில், முழுமையான ‘பயோ செக்யூரிட்டி’ முறைகள் கடைப்பிடிக்கப்படுவதால், இங்கு பறவைக்காய்ச்சல் பரவுவதற்கு வாய்ப்பே இல்லை.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள கோழிப்பண்ணை தொழிலை பாதுகாக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் நாமக்கல் மண்டலத்தை தனி முட்டை ஏற்றுமதி மண்டலமாக அறிவித்து வேறு பகுதியில் பறவைக்காய்ச்சல் நோய் தாக்கம் தென்பட்டாலும், இங்கு முட்டை ஏற்றுமதி பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *