• November 23, 2026

நடிகர் அர்ஜுன் மகள் குறித்து அவதூறு: பயில்வான் ரங்கநாதனிடம் போலீஸ் விசாரணை

 நடிகர் அர்ஜுன் மகள் குறித்து அவதூறு: பயில்வான் ரங்கநாதனிடம் போலீஸ் விசாரணை

நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, நடிகர் உமாபதியை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், ஐஸ்வர்யா குறித்து யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறான தகவல்கள் பரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, அவரை மதுவுக்கு அடிமையானவர் எனக் குறிப்பிட்டு பயில்வான் ரங்கநாதன் பேசியதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, தனது மகள் குறித்து ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த நவம்பர் 19-ந்தேதி நடிகர் அர்ஜுன் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் புகார் மனு அளித்தார்.

அர்ஜுன் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பயில்வான் ரங்கநாதன் ஆஜரானார். அவரிடம் மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. விசாரணையின் முடிவில் மேலும் சில தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *