• November 23, 2026

சபரிமலைக்கு செல்ல ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் ரத்து ,தேதி மாற்றம் செய்ய வசதி; தேவஸ்தானம் அறிவிப்பு

 சபரிமலைக்கு செல்ல ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் ரத்து ,தேதி மாற்றம் செய்ய வசதி;  தேவஸ்தானம் அறிவிப்பு

சபரிமலைக்கு சபரிமலை தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களில் பாதி பேர் மட்டுமே தரிசனத்திற்கு வருவதாக கூறப்படுகிறது.

சில சுற்றுலா நிறுவனங்கள் அல்லது முகவர்கள் மொத்தமாக முன்பதிவு செய்து விட்டு அவற்றை ரத்து செய்யாமல் விட்டு விடுகிறார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து முறையாக விசாரணை நடத்த தேவஸ்தான தலைவர் ஜெயக்குமார், ஏ.டி.ஜி.பி. விஜயன் ஆகியோருக்கு தேவஸ்தானத்துறை மந்திரி முரளிதரன் உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஆன்லைன் முன்பதிவில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முன்பதிவில் வருகிற 30-ந் தேதி வரை தினசரி எண்ணிக்கையில் கூடுதலாக 5 ஆயிரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

போலி முன்பதிவுகளைத் தடுக்கவும், மொத்தமாக முன்பதிவு செய்வதை தடுக்கவும் ஆதார் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி.-ஐ உள்ளீடு செய்தால் மட்டுமே இனிமேல் முன்பதிவு செய்ய முடியும்.

ஆன்லைனில் முன்பதிவு செய்துவிட்டு, குறிப்பிட்ட நாளில் தரிசனத்திற்கு வராத பக்தர்கள் இந்த சீசனில் மீண்டும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாது. ஆனால் இவர்கள் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தரிசனம் செய்யலாம்.

குறிப்பிட்ட நாளில் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், தரிசன நாளுக்கு முன்பாகவே முன்பதிவை ரத்து செய்யவோ அல்லது தேதி மாற்றம் செய்யவோ வசதி செய்யப்பட்டுள்ளது. பம்பையில் செயல்பட்டு வந்த உடனடி தரிசன முன்பதிவு மையம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *