கோவில்பட்டி முகாமில் இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கு 14 பேர் தேர்வு
கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளி 1974-1977 ஆண்டு பழைய மாணவர் சங்கம், தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனன இணைந்து மாதம் தோறும் நான்காவது ஞாயிறுதோறும் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி வருகிறார்கள்.
நவம்பர் மாத நான்காம் ஞாயிறு அன்று 22-11-2026 கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள St. பால்ஸ் உயர்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை, கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

சங்க நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், ராஜேந்திரன், பாலசுப்ரமணியன்,,ராஜேந்திரன்,அருள்ஜான்,,.ஜான் ஜெயபிரகாஷ், தங்கமாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், நிதி உதவியுடன் நடைபெற்ற இந்த முகாமில் 90 நோயாளிகள் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் கண்புரை இலவச அறுவை சிகிச்சைக்கு 14 பேர் தேர்வு செய்யப்பட்டு அரவிந்த கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்,.







