• November 24, 2026

காணாமல் போன 132 செல்போன்கள் மீட்பு: உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

 காணாமல் போன 132 செல்போன்கள் மீட்பு: உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

Oplus_16908288

 தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன 132 செல்போன்கள் பற்றி போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.

 இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ரா. சிவபிரசாத் உத்தரவின்படி, சைபர் குற்றப்பிரிவு போலீசார் செல்போன் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

  IMEI எண்கள் மூலம் தொழில்நுட்ப ரீதியாக சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு, காணாமல் போன செல்போன்கள் இருக்கும் இடங்களை அறிந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து உரிய நடவடிக்கையின் மூலம் 132 செல்போன்களை மீட்டனர்.

மீட்கப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், அவற்றின் உரிமையாளர்களை வரவழைத்து ஒப்படைத்தார்.

#

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *