கோவில்பட்டி : கஞ்சா வழக்கில் கைதான அண்ணன் -தம்பி தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைப்பு
Oplus_16908288
கோவில்பட்டி பாரதிநகரை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் கரன்குமார் (வயது 26) மற்றும் கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட கரன்குமாரின் சகோதரர் கற்பகமூர்த்தி(28) ஆகிய இருவரையும் கோவில்பட்டி மேற்கு போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியர் சாஜு மகாஜன் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து அண்ணன் -தம்பி இருவரும் திருநெல்வேலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.







