• November 26, 2026

போக்சோ வழக்கில் கைதானவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

 போக்சோ வழக்கில் கைதானவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

Oplus_16908288

திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 2021ம் வருடம் 13 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில், திருச்செந்தூர் காயல்பட்டிணம் பகுதியை சேர்ந்த முகமதுஅலி மகன் முத்துவாப்பா (வயது 30) என்பவரை திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கின் விசாரணை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,  நீதிபதி முருகன் இன்று (25.11.2026) முத்துவாப்பாவை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 5 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *