தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், பதவியை ராஜினாமா செய்ய முடிவு?
பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதற்கான முழு ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், பாலியல் வழக்கில் சிக்கியுள்ள கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் தனது பதவியை இன்று அல்லது நாளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் ராஜினாமா செய்ய முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.
ராஜினாமா செய்த பின் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கைது நடவடிக்கை இருக்கும் எனக் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.







