• November 24, 2026

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை

 சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற வேண்டும் என மதுரை மாவட்ட நிர்வாகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 20-ந்தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

 இந்த மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

சுப்ரீம் கோர்ட்டுக்கு இன்று விடுமுறை என்பதால் இன்றைக்கும் சீராய்வு மனு விசாரணைக்கு வரவாய்ப்பில்லை. இதனால் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படலாம். இருப்பினும் சீராய்வு மனு நிலுவையில் இருப்பதை கூறி அதில் முடிவு வரும் வரை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை தள்ளிப்போடவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது.

 இதனால் கடந்த 2 நாட்களாக திருப்பரங்குன்றம் பகுதி பரபரப்பாகவே காணப்பட்டது.மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. திருப்பரங்குன்றம் முழு பகுதியும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது.

இதற்கிடையில் மதுரையில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபம் ஏற்றுவது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் உச்சிப் பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தீபத் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. தன் நிலைப்பாட்டில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருந்துள்ளது.

இதையடுத்து தீபத் தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து மலை அடிவாரத்தில் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலைப் பாதையில் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *