• November 26, 2026

செல்போன் பறிப்பு வழக்கில் கைதான 2  பேர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைப்பு

 செல்போன் பறிப்பு வழக்கில் கைதான 2  பேர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைப்பு

Oplus_16908288

கோவில்பட்டியில் செல்போன் பறிப்பு வழக்கில்  வசந்தம்நகரை சேர்ந்த ஈஸ்வரன் மகன் காளிநாகராஜ் (19) மற்றும்  புதுகிராமம் பகுதியை சேர்ந்த அமல்ராஜ் மகன் வினோ ஜெபஸ்டின் (20) ஆகியோர் பிடிபட்டனர்.

 இவர்கள் 2 பேரையும் கோவில்பட்டி கிழக்கு போலீசார் கைது செய்தனர். இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் சாஜு மகாஜன்  தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 இந்த ஆண்டு இதுவரை 139 பேர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *