கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்கள்; 4-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு (1500 காலி பணியிடங்கள்)ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தொடங்குகின்றன.
4.12.2026 முதல் 18.12.2026 வரை விண்ணப்பிக்கலாம்.
எழுத்துத் தேர்வு: 19.1.2027 முதல் 21.1.2027 வரை நடக்கிறது.

தேர்வு முடிவுகள்: 25.1.2027 அன்று வெளியிடப்படும் பணி நியமனம் 27. 1.2027 அன்று நடக்கும்.
கல்வித் தகுதி குறைந்தது பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 18 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். அந்தந்த பஞ்சாயத்தில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20 ஆயிரம் வரை இருக்கும்.
மேலும் தகவல்களுக்கு www.tnrd.tn.gov.in
என்ற இணையதளத்தில் பார்க்கவும்.







