• November 28, 2026

போக்குவரத்து துறையில் கருணை அடிப்படையில் வேலை வழங்க அதிகாரிகள் மறுப்பு?  தூத்துக்குடி ஆட்சியரிடம் பெண் புகார் 

 போக்குவரத்து துறையில் கருணை அடிப்படையில் வேலை வழங்க அதிகாரிகள் மறுப்பு?  தூத்துக்குடி ஆட்சியரிடம் பெண் புகார் 

Oplus_16908288

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த பால்குணம் என்பவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். பணியில் இருந்தபோது ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பு காரணமாக கடந்த 2009-ஆம் ஆண்டு அவர் உயிரிழந்தார்.

பால்குணத்தின் ஒரே வாரிசான அவரது மகள் ஜெயமுருகானந்தி (35), தந்தையின் மறைவுக்குப் பிறகு கருணை அசாத்தான்குளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது தந்தை அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றியபோது உயிரிழந்ததால், தனக்குக் கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்டிப்படையில் தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என  விண்ணப்பித்துள்ளார்.

வேலை வழங்குவதற்கான சான்றிதழ்கள் கடந்த 2021-ஆம் ஆண்டு சரிபார்க்கப்பட்டதாகவும், இருப்பினும் இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆண் வாரிசாக இருந்திருந்தால் வேலை வழங்கியிருப்போம் என்றும், பெண் என்பதால் வேலை வழங்க முடியாது என்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாக தனது மனுவில் ஜெயமுருகானந்தி குறிப்பிட்டுள்ளார்.

தனது தாய் ஜெயலட்சுமியுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற ஜெயமுருகானந்தி, தனக்குப் பாரபட்சமின்றி கருணை அடிப்படையில் வேலை வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *