• November 13, 2026

மணிமுத்தாறு அருவிக்கு செல்ல இன்று  முதல் 6 நாட்களுக்கு தடை

 மணிமுத்தாறு அருவிக்கு செல்ல இன்று  முதல் 6 நாட்களுக்கு தடை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகமாக இருந்து வருவதாலும், வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளதாலும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் அப்பகுதிக்கு செல்லவும்   இன்று( நவம்பர் 13 ) முதல் 6 நாட்களுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு பணிகளும் நடைபெற உள்ளன. இதற்காக வனத்துறையினர் பல்வேறு கட்டங்களாக கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பது மற்றும் கணக்கெடுப்பு பணிகளை தடையின்றி மேற்கொள்வது அவசியமாக உள்ளது.

இதன் காரணமாக, சுற்றுலா பயணிகளின் வருகைக்கு தற்காலிகமாக தடை விதிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, நவம்பர் 13-ந்தேதி (இன்று)முதல் நவம்பர் 18-ந்தேதி வரை 6 நாட்களுக்கு  ,மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை சுற்றுலா பயணிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

நவம்பர் 19-ந்தேதி முதல் நிலைமையை பொறுத்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவது குறித்து வனத்துறை முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *