• November 12, 2026

எப்போதும்வென்றான் அணைக்கட்டு பகுதியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

 எப்போதும்வென்றான் அணைக்கட்டு பகுதியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுப் பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, இன்று (நவம்பர் 12) மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் வேளாண்மை இயக்குநருமான கே.வி. முரளிதரன், தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், எப்போதும்வென்றான் அணைக்கட்டுப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அணைக்கட்டின் நீர்மட்டம், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் உபரிநீர் செல்லும் கால்வாய்களில் தடையின்றி நீர் செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்தார். மேலும், மழைக்காலங்களில் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் உடன் இருந்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *