• November 12, 2026

கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டரை  கண்டித்து ஆர்ப்பாட்டம்

 கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டரை  கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி வட்டம் மந்தி தோப்பு கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியின மக்களிடம் மனித உரிமை மீறலுடன் நடந்து கொண்டதாக  மேற்கு போலீஸ்  இன்ஸ்பெக்டர்  வானமாமலையை  கண்டித்து கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்  வானமாமலையின் நடவடிக்கைகளை கண்டித்து சென்னை  உயர் நீதிமன்றம் மதுரை கிளை அவர் மீது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், ரூபாய் 5000 அபராதம் விதித்தும்  உத்தரவு  பிறப்பித்துள்ளது.

மேலும் புகார் கொடுக்க வருபவர்களிடமும், பொது நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு வருபவர்களிடமும் தொடர்ந்து சட்ட விரோதமாக பேசி மிரட்டக்கூடிய செயலை செய்து வருகிறார்.எனவே அவர் மீது தமிழ்நாடு அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சார் ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க. தமிழரசன், பொருளாளர் சுபேதார் கே. கருப்பசாமி, நாம் தமிழர் கட்சி  வழக்கறிஞர்  எம்.ரவிக்குமார், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட செயலாளர் துரைராஜ்,ஐ என் டி யு சி மகேந்திரன், பகத்சிங் ரத்ததான கழக காளிதாஸ், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், தியாகி விஸ்வநாததாஸ் பேரவை சங்கர், இரட்டைமலை சீனிவாசனார் இயக்க செல்வகுமார், வழக்கறிஞர் டி முத்துக்குமார், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்து குமார், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனத் தலைவர் செல்லத்துரை என்ற செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *