கோவில்பட்டியில் இலவச கல்லீரல் ஸ்கேன் பரிசோதனை முகாம்; கமலா மருத்துவமனையில் நாளை நடக்கிறது
கோவில்பட்டி ஜே.சி.ஐ,அமைப்பும் கமலா மருத்துவமனையும் இனைந்து நடத்தும் இலவச கல்லீரல் ஸ்கேன் பரிசோதனை முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடக்கிறது.
கோவில்பட்டி சந்தைபேட்டை தெருவில் உள்ள கமலா ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நடக்கும் இந்த முகாமில் அதிகபட்சமாக 60 பேர்களுக்கு மட்டுமே ஸ்கேன் பரிசோதனை நடைபெறும். எனவே 94880 46777, 70944 46077, 95973 33446 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பைப்ரோ’ ஸ்கேன் என்பது ஒரு நவீன, வலியில்லாத கல்லீரல் பரிசோதனை முறையாகும். கல்லீரலில் உள்ள கொழுப்பின் அளவை அறிய உதவும். கல்லீரலின் விறைப்புத்தன்மையை அளவிடும். கல்லீரல் நார்த்திசு பாதிப்பை (Fibrosis) மதிப்பிட உதவும்.
கொழுப்புக் கல்லீரல் உள்ளவர்கள், நீரிழிவு மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள்
மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் ஹெபடைட்டிஸ் B அல்லது C உள்ளவர்கள், கல்லீரல் ரத்தப் பரிசோதனையில் மாற்றம் உள்ளவர்கள் இந்த பரிசோதனை செய்து கொள்ளலாம்.







