• November 12, 2026

திமுக-அதிமுகவுடன் தொடர்பு: 30 த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் எச்சரிக்கை

 திமுக-அதிமுகவுடன் தொடர்பு: 30 த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் எச்சரிக்கை

தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் பதவிக்காலம் நேற்று முன்தினத்துடன் 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. அதே சமயம் .6 மாதங்களை வெற்றிகரமாக த.வெ.க. அரசு கடந்ததா? என்ற கேள்வியும் மற்றொரு பக்கம் எழாமல் இல்லை.

தமிழகத்தில் த.வெ.க. அரசு தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கவில்லை. தற்போதைய நிலையில், அக்கட்சிக்கு சட்டசபையில் பலம் 109 என்ற நிலையிலேயே இருக்கிறது. தனி மெஜாரிட்டிக்கு இன்னும் 9 இடங்கள் தேவை.

இந்த சூழ்நிலையில், த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை இழுக்க எதிர்க்கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. முயற்சி செய்துவருவதாக உளவுத்துறை மூலம் ஆளும் த.வெ.க. அரசுக்கு தகவல்கள் கிடைத்தன.

த.வெ.க.வை சேர்ந்த சில அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் தி.மு.க. – அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களுடன் ரகசிய தொடர்பில் இருப்பதாகவும் கட்சித் தலைமைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுபோக, துணை சபாநாயகர் ரவிசங்கர், எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆகியோரின் நடவடிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, த.வெ.க. அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

 த.வெ.க.வுக்கு தி.மு.க., அ.தி.மு.க. என்ற இருபெரும் எதிர்க்கட்சிகள், இரட்டை குழல் துப்பாக்கியாக இருந்து இரட்டை தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன.

கடந்த 6 மாத கால த.வெ.க. ஆட்சியில், தொடர் கொலைகள் போன்ற சட்டம் – ஒழுங்கு பிரச்சினை கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகின்றன.

இதுபோக, தேர்தலுக்கு முன்பு ஆட்டோக்களில் சுற்றிய சில த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் தற்போது சொகுசு காரில் வலம் வருவதாகவும், நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித் துறைகளில் பணிகளை மேற்கொள்ளும் கான்டிராக்டர்களிடம் குறிப்பிட்ட சதவீதம் பணத்தை கமிஷனாக கேட்டு பெறுவதாகவும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு  

இதுபோன்ற நிலையில்தான், த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கடிவாளம் போடும் வகையில், நேற்று மாமல்லபுரத்தை அடுத்த பேரூரில் உள்ள நட்சத்திர விடுதியில் அவர்கள் அனைவரையும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்  அழைத்து பேசினார்.

இந்தக் கூட்டத்தில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர் ஸ்ரீநாத், எம்.எல்.ஏ.க்கள் முஸ்தபா, வி.எஸ்.பாபு ஆகிய 4 பேர் கலந்துகொள்ளவில்லை. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வருவதற்கு முன்பாகவே அனைத்து எம்.எல்.ஏ.க்களிடமும் வெள்ளை காகிதத்தில் கையெழுத்து வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், எதற்காக இந்தக் கூட்டம் என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

முதல்-அமைச்சர்ஜோசப் விஜய் கூட்டத்திற்கு வந்தவுடன், உளவுத்துறை ஏற்கனவே சமர்ப்பித்து இருந்த கருப்பு பட்டியலில் உள்ள 30 எம்.எல்.ஏ.க்களை தனித்தனியாக அழைத்து கடிந்து கொண்டார். தி.மு.க., அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களுடன் தொடர்பில் இருப்பதை சுட்டிக்காட்டியதுடன், இதுபோன்று இனியும் நடந்துகொண்டால் தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுப்பேன் என்று கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

தி.மு.க. – அ.தி.மு.க. விரிக்கும் மாய வலையில் த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் சிக்கிவிடக்கூடாது என்றும், ஆட்சியை கலைக்கும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் முதல்-அமைச்சர் விஜய் கூறியுள்ளார்.

அதன்பிறகு, சில எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீது குற்றம்சாட்டியுள்ளனர். அதுகுறித்து விசாரிப்பதாகவும் முதல்-அமைச்சர் விஜய் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டம் முடிந்ததும் ஆண்களுக்கு பட்டு வேட்டி-சட்டையுடன் இனிப்பும், பெண்களுக்கு பட்டு சேலையுடன் இனிப்பும் தீபாவளி பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *