• November 13, 2026

போலீஸ் நண்பர்கள் குழுவை மீண்டும் அமைக்க  முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை

 போலீஸ் நண்பர்கள் குழுவை மீண்டும் அமைக்க  முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை

தமிழகத்தில், த.வெ.க., அரசு பொறுப்பேற்ற பின்னர் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும், சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி அடைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், சட்டம்-ஒழுங்கு தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் சட்ட அமைச்சர் நிர்மல்குமார், தலைமை செயலர் சாய்குமார், உள்துறை செயலர் கார்த்திக், டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., சங்கர், சென்னை மாநகர கமிஷனர் அமல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது அதிகாரிகள் முதல்-அமைச்சரிடம், ‘தமிழகத்தில் காவலர்கள் பற்றாக்குறை உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், கூடுதல் பணிச்சுமையில் காவலர்கள் உள்ளனர். காவலர்கள் எண்ணிக்கையை அதிகரித்தால், பிரச்சினையை சமாளிக்க முடியும்’ என்று தெரிவித்தனர்.

போலீசாரை பணிக்கு எடுத்து, அவர்களுக்கு பயிற்சி வழங்கி, ஆயுதப்படையில் சேர்ப்பதற்கு ஓராண்டுக்கு மேல் தேவைப்படும் என்பதால், தற்போதுள்ள நிலைமையை சமாளிப்பதற்கு, சட்டம்-ஒழுங்கு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு உதவும் வகையில், போலீஸ் நண்பர்கள் குழுவை மீண்டும் உருவாக்குவது குறித்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *