முதலமைச்சர் கோப்பை தடகள போட்டி: கோவில்பட்டி கல்லூரி மாணவர், மாணவி சாதனை
மாணவி சரண்யா. மாணவர் துரைராஜ் .
தூத்துக்குடி மாவட்ட அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான முதலமைச்சர் கோப்பை தடகளப் போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மைதானத்தில் நடைபெற்றன.
கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு படிக்கும் உடற்கல்வித்துறை மாணவி சரண்யா, 200 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம், 100 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்து ரொக்கப் பரிசு ரூ 5000 வென்றார்.

மேலும், இரண்டாம் ஆண்டு உடற்கல்வித்துறை மாணவர் துரைராஜ், 1500 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடமும், 5000 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடமும் பெற்று ரொக்கப்பரிசு ரூபாய் 3000 வென்றார்.
தடகள போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற …இரண்டாம் ஆண்டு உடற்கல்வித்துறை மாணவி சரண்யா, மாணவர் துரைராஜ் ஆகியோரை கல்லூரிச் செயலாளர் கண்ணன், முதல்வர் முனைவர் செல்வராஜ் ஆகியோர் பாராட்டினார்கள்.







