தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பில் இருந்த 6 பேர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் கீழ்வாசல் பகுதியில் தடைசெய்யப்பட்ட கிலாபத் இயக்கத்தில் ஆள் சேர்த்து விடுவதாகக் கூறி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் மூலம் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதி மன்றத்தில் அனுமதி பெற்று, சிறப்பு புலனாய்வு போலீசார் சார்லஸ் தலைமையில் கடந்த 29-ந்தேதி தஞ்சாவூரில் 6 இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
கிலாபத் இயக்கத்தில் இருப்பதாக சந்தேகித்து தஞ்சாவூர் கீழ்வாசல் பகுதியை சேர்ந்த சாஹிர் உசேன்,அப்துல் வர்கீஸ், உமர் முக்தார், யாசர் அப்துல், சம்சுதின், ஷேக் பரீத் 6 பேரை போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தனர். அவர்களிடமிருந்த செல்போன்கள், லேப்டாப், பென்டிரைவை போலீசார் கைப்பற்றினர்.

பின்னர், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிலாபத் இயக்கத்துடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. தடைசெய்யப்பட்ட கிலாபத் இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக கூறி சாஹிர் உசேன்,அப்துல் வர்கீஸ், உமர் முக்தார், யாசர் அப்துல், சம்சுதின், ஷேக் பரீத் ஆகிய 6 பேரை இன்று தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.







