ஏற்றுமதி – இறக்குமதி விழிப்புணர்வு கருத்தரங்கம்; கோவில்பட்டியில் 6 ந் தேதி நடக்கிறது
கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில் அக்டோபர் 6 ந் தேதி ஏற்றுமதி – இறக்குமதி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடக்கிறது.
உள்ளூரில் தயாரிப்போம்… உலகிற்கு ஏற்றுமதி செய்வோம்!” என்ற கோஷத்துடன் நடைபெறும் இந்த கருத்தரங்கில் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பிளாஸ்டிக் தயாரிப்புகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் பற்றி அலசி ஆராயப்படுகிறது.

கருத்தரங்கில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) தொழில் முனைவோர் உற்பத்தியாளர்கள், பிளாஸ்டிக் தொழில் நிறுவனங்கள் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு உற்பத்தியாளர்கள், புதிய தொழில் முனைவோர், ஏற்றுமதி / இறக்குமதியில் ஆர்வமுள்ளவர்கள் மாணவர்கள் & இளம் தொழில் முனைவோர் கலந்து கொள்ளலாம்.
-இந்த கருத்தரங்கின் மூலம் ஏற்றுமதி தொழிலை தொடங்குவது எப்படி? வெளிநாட்டு சந்தைகளை அணுகுவது எப்படி? ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் விதிமுறை இணக்கம், இறக்குமதி-ஏற்றுமதி வணிக வாய்ப்புகள் அரசு மற்றும் நிறுவனங்களின் ஆதரவு வாய்ப்புகள், பிளாஸ்டிக் மற்றும் Value-Added Products-ஐ உலக சந்தைக்கு கொண்டு செல்வது எப்படி? என்பன பற்றி அறிந்து கொள்ளமுடியும்,
இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள கட்டணம் எதுவும் கிடையாது. உணவு உட்பட இலவசம். கருத்தரங்கில் பங்கேற்க முன்பதிவு அவசியம் ஆகும்,.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழே உள்ள Google Form-ஐ கட்டாயம் நிரப்பவும்.
🔗 Google Form Registration: https://forms.gle/3NRFhAGwgsz9pdc56
இடங்கள் குறைவாக உள்ளதால், விரைவாக பதிவு செய்து உங்கள் பங்கேற்பை உறுதி செய்யுங்கள். மேலும் தொடர்புக்கு: 96008 47709 என்ற அலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.








