நகைகள் திருட்டு வழக்கில் குற்றவாளிக்கு 6 வருடம் சிறை தண்டனை
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கங்கா பரமேஸ்வரி காலனியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 57) என்பவரது வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்த 23 1/2 பவுன் தங்க நகைகள் திருட்டு போயின.
கடந்த 2025ம் வருடம் நடந்த இந்த சம்பவத்தில் தொடர்புடைய வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் பாண்டியன் (38) மற்றும் தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த சத்தியசீலன் மகன் பேரின்பநாதன் (22) ஆகிய இருவரையும் சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

–
இவர்கள் மீதான வழக்கு விசாரணை மாவட்ட ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு 3 வது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மேற்படி நீதிமன்ற நீதிபதி விஜயராஜ்குமார் நேற்று (29.09.2026) பேரின்பநாதனை விடுதலை செய்தும், பாண்டியன் என்பவரை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 6 வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.







