கோவில்பட்டி புதுக்கிராமம் செல்வ மாதா ஆலய திருவிழா கொடியேற்றம்
Oplus_16908288
கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தின் கிளை பங்கான புதுக்கிராமம் பரிசுத்த செல்வ மாதா ஆலய திருவிழா கொடியேற்றம் இன்று 29-ந் தேதி மாலை நடைபெற்றது.
ஆலய பங்கு தந்தை அருள்ராஜ் அடிகளார், உதவி பங்குதந்தை குழந்தைராஜ் அடிகளார், குறுக்குச்சாலை பங்கு தந்தை சுரேஷ்பாபு அடிகளார் இணைந்து திருவிழா கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினார்கள்.
பின்னர் திருவிழா தொடங்கி தொடர்ந்து பத்து நாட்கள் ஆலயத்தில் திருப்பலிகளும்,தியானம்,ஒப்புரவு அருட்சாதனம் மற்றும் பல நிகழ்வுகளுடன் திருவிழா நடைபெறும்.

இதில் ஒன்பதாம் நாள் திருவிழா அக்டோபர் 7ம் தேதி மாலை 6:30 மணிக்கு ஆலயத்தில் திருப்பலியும் பின் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் செல்வமாதா அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடக்கும்.
இந்து, முஸ்லிம்,கிறிஸ்தவம் ஆகிய மும்மத குருக்களால் பிரார்தனைகள் செய்யப்பட்டு பவனி துவங்கப்பட்டு புதுக்கிராமம் 3-வது தெரு, கடலையூர் மெயின்ரோடு,பங்களாதெரு வரை சென்று புதுக்கிராமம் 2-வது தெரு வழியாக ஆலயம் வந்து சேரும்.
மறுநாள் 8ம் தேதி மாலை 6:30 மணிக்கு திருவிழா திருப்பலியும் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.திருவிழா நடைபெறும் 10 நாட்களும் திருப்பலி முடிந்த பின் அனைவருக்கும் அசன விருந்து வழங்கப்படும்.







