மத்திய அரசை கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பின்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி அறிவுறுத்தலின்படி கோவில்பட்டியில் காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பின்பு மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்று பயணியர் விடுதி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வுமற்றும் CBSE தேர்வுகளை கண்டித்தும் டெல்லியில் நடைபெற்ற மாணவர்களுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு நகரத் தலைவர் அருண்பாண்டியன் வட்டாரத் தலைவர் ரமேஷ் மூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.ஐஎன்டியுசி மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன்,மாவட்டச் செயலாளர் துரைராஜ்,முன்னாள் மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராஜாராம்,மாவட்ட துணைத் தலைவர் பெத்துராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
எஸ்சி எஸ்டி பிரிவு மாநில துணைத்தலைவர் மாரிமுத்து வட்டாரத்தலைவர் .முருகன், கழுகுமலை சங்கர் சேவாதாளம் பிரிவு மாவட்ட தலைவர் சக்தி விநாயகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

முன்னாள் வட்டார தலைவர் செல்லத்துரை,விளாத்திகுளம் மேடைசேர்மன், கயத்தார் நகர தலைவர் குருநாதன், கோவில்பட்டி கிழக்கு வட்டார தலைவர் மாரியசூசைராஜ் விளாத்திகுளம் நகரத்தலைவர் ஞானராஜ், புதூர் மேற்கு வட்டார தலைவர் யோகேஸ்வரன், விவசாயி பிரிவு மாவட்டத்தலைவர் பேரையா, மாவட்டச் செயலாளர் விஜயபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







