சிறு,குறு வணிகர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்; வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் குளத்தூர் ரவி பேட்டி
Oplus_16908288
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட கலந்தாய்வும் வுக் கூட்டம், கோவில்பட் டியில் மாவட்டத் தலைவர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் குளத்தூர் ரவி விருந்தினராக
சிறப்பு கலந்துகொண்டு 20க்கும் மேற் பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு அனைத்து வணி கர் சங்கங்களின் பேரமைப் பின் மாநிலத் தலைவர்
எம்.குளத்தூர் ரவி செய்தியாளர் களிடம் பேசுகையில் கூறியதாவது :-
சிறுகுறு தொழில்களுக்கு கடந்த கால அரசுகள் எது செய்யவில்லை. தற் போதுள்ள அரசு சிறுகுறு தொழிலில் ஈடுபடுபவர் களை அழைத்து ஆய்வு மற் றும் ஆலோசனை நடத்தி அவர்களுக்கு வங்கி மூல மாக வட்டி இல்லாமல் கடன் வழங்கினால் அவர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்தி கொள்வார்கள்.

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பொருள்கள் சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் எடுக்க வேண்டும்.கருப்பட்டி நியாயவிலைக்
கடைகளில் கிடைக்க நடவடிக்கை
வேண்டும்.
இங்குள்ள வணிகர்களுக்கு அரசு எதுவும் செய்வதில்லை. ஆனால் அந்நிய
முதலீடு செய்பவர்களுக்கு 75 சதவீதம் மத்திய மாநில அரசுகள் கடன் கொடுக்கின் றன. அது போன்று தமிழக சிறு வணிகர்களுக்கும் கடன் கொடுத்துகாப்பாற்றவேண் டும் என்று தமிழக முதல் வரை கேட்டுக்கொள்கி றேன்.
இவ்வாறு குளத்தூர் ரவி கூறினார்








