கோவில்பட்டி தினசரி சந்தையில் குறைந்த வாடகையில் கடைகளை மறு ஏலம் விட வேண்டும்; வணிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம், கோவில்பட்டியில் மாவட்டத் தலைவர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது.

மாநிலத் தலைவர் குளத்தூர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளான அசோக்குமார், ராஜ்மோகன்,வெற்றி வேல் திரு. ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சதீஸ் மற்றும் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் 20-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :-
*புவிசார் குறியீடு (GI) பெற்ற கோவில்பட்டி கடலைமிட்டாயை அரசு சத்துணவுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
*தோட்டிலோவன்பட்டி முதல் நாலாட்டின்புதூர் வரை புறவழிச்சாலை அமைக்க வேண்டும்.
*கோவில்பட்டி முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தையில்உள்ள கடைகளை வியாபாரிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்கும் வகையில் மறு ஏலம் நடத்த வேண்டும்.
*கோவில்பட்டியில் மந்தித்தோப்பு சாலையில் உள்ள குண்டும் குழியுமான சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
*சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

*கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்திற்குட்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தின் முடிவில் ஜெயபாஸ் நன்றி கூறினார்.







