கோவில்பட்டியில் மண்டல அளவிலான பள்ளி மாணவர் ஆக்கி போட்டி தொடக்கம்
Oplus_16908288

டெல்லி CISCE வாரியத்துடன் இணைக்கப்பட்ட கோவில்பட்டி பிருந்தாவன்ஸ் கிட்ஸ் யுனிவர்சிட்டி பள்ளி சார்பில், மண்டல அளவிலான CISCE ஆக்கி போட்டி இன்று ஜூலை 25 தொடங்கியது. நாளை 26 ந் தேதியும் நடக்கிறது.

கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் தொடங்கிய போட்டியில், மண்டலத்திற்குட்பட்ட 11 முன்னணி CISCE பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இத்தொடரில் மொத்தம் 54 போட்டிகள்** நடைபெற உள்ளது.
14 வயது 17 வயது 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி போட்டிகள் தனித்தனியாக லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடத்தப்பட உள்ளன.
இன்று காலை துவங்கிய முதல் போட்டியை பள்ளியின் தாளாளர் * பார்த்திபன் மற்றும் இயக்குநர் அர்ஜுன் பாரத், ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி, பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

சிறப்பு விருந்தினர்களுக்கு போட்டியின் ஒருங்கிணைப்பாளர் விவின்காந்த் வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார் நாளை மாலை இறுதி போட்டி நடைபெறும் சிறப்பாக விளையாடும் வீரர்களை தேர்வு செய்து தேசிய போட்டிக்கு விளையாட அழைத்துச் செல்லப்படுவர்.
முன்னாள் இந்திய ஆக்கி வீரர் அஸ்வின் தேர்வு குழு தலைவராக இருந்து வீரர்களை தேர்வு செய்வார்.

போட்டியின் இயக்குனராக திருச்செல்வம் மற்றும் நடுவர்களாக காளிதாஸ், மதன்குமார், அருணாச்சல வடிவு, சிவானந்த், மாரியப்பன், மதனா, சண்முகப்பிரியா, கௌதம், வேல்முருகன், பேபி, ஆகியோர் செயல்படுகின்றனர்.







