கோவில்பட்டி ராகவேந்திரா சேவா அறக்கட்டளை 56 வது மாத அன்னதானம்
கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பூஜைகளை கோயில் அர்ச்சகர் ஹரிபட்டர் செய்திருந்தார் தொடர்ந்து விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு அறக்கட்டளை சார்பாக பொங்கல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது

நிகழ்ச்சிக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பாஸ்கரன் தலைமை தாங்கினார், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கா. கருணாநிதி, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் ஆகியோர் அன்னதானத்தை துவக்கி வைத்தனர்,
MKS கேட்டரிங் உரிமையாளர் கருப்பசாமி வரவேற்புரையாற்றினார் நகர்மன்ற உறுப்பினர் சண்முகவேல், தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைத் தலைவர் கயத்தாறு கணேசன் , மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், ஆசிரியர் அன்பு, மகாலட்சுமி ஆட்டோ கன்சல்டிங் உரிமையாளர் காளிராஜ், செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
அருண் பேக்கரி உரிமையாளர் மாடசாமி, கடலைமிட்டாய் வியாபாரிகள் சங்கத் தலைவர் கார்த்தீஸ்வரன், பிள்ளையார் நத்தம் கிராமநிர்வாக அலுவலர் சூடாமணி, கழுகுமலை பத்திர எழுத்தர் பெரியராஜா, நாகஜோதி மேட்ச் இண்டஸ்ட்ரீஸ் மேலாளர் பாலமுருகன், மாலினி பிலிம்ஸ் பாண்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், தலைவர் ஜெயக்கொடி, செயலாளர் ஜோதிகாமாட்சி, பொருளாளர் கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன், பாலமுருகன், லவராஜா, கதிரேசன், சண்முகசுந்தரம், அசோக், செல்வம் , எஸ்.பி.பாண்டியன், பெரியசாமி, அறக்கட்டளை வழக்கறிஞர்கள் முனீஸ்வரன், கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி நிறைவில் அறக்கட்டளை உறுப்பினர் தங்கராஜ் நன்றி கூறினார். இந்த மாத அன்னதானம் மற்றும் ஏற்பாடுகள் அனைத்தையும் எம்.கே.எஸ் கேட்டரிங் கருப்பசாமி மற்றும் எம்.கே. மணிப்பிள்ளை குடும்பத்தினர் செய்திருந்தனர் நிகழ்ச்சியில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது







