கோவில்பட்டியில் தனியார் பஸ்கள் மற்றும் மினி பஸ் கட்டணம் திடீர் உயர்வு
கோவில்பட்டி பகுதி யில் இயக்கப்படும் சில தனியார் பஸ்கள் மற் றும் தனியார் மினி பஸ் களில் எவ்வித முன் அறி விப்புமின்றி கட்டணங்கள் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவில்பட்டி நகர் மற் றும் சுற்றுவட்டார பகு திக்கு செல்லும் தனியார் மினி பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 2 முதல் ரூ. 3 வரை கட்ட ணம் உயர்த்தப்பட்டுள் ளது. அதிகபட்சமாக ரூ.10 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 13 ரூபாய் வரை வசூலிக்கப்ப டுகிறது.
அதேபோன்று விளாத்திகுளம், ஜமீன்தே வர்குளம் பகுதிகளுக்கு செல்லும் தனியார் பஸ்களில் குறைந்தபட்சமாக ரூ 3 முதல் ரூ 5 வரை கட் டணம் திடீரெனஉயர்த்தப் பட்டுள்ளது.
கோவில்பட் டியில் இருந்து ஜமீன் தேவர்குளம் செல்வதற்கு ரூ.13 கட்டணமாக வசூலிக்கப்பட்ட நிலை யில் நேற்று முதல் ரூ 16 வசூலிக்கப்படுகி றது. இதேபோன்று கோவில்பட்டியில் இருந்து விளாத்திகுளம் செல்வதற்கு ரூ. 25 வசூலிக்கப்பட்ட நிலை யில் தற்போது ரூ. 30 ஆக வசூலிக்கப்படுகிறது .

பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஒருபுறம் அதிக ரித்து வரும் நிலையில் தனியார் மினி பஸ் மற்றும் நீண்ட தூர தனியார் பஸ்களில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது பொது மக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.







