கோவில்பட்டி எஸ் .எஸ். டி .எம். கல்லூரியில் சீரமைக்கப்பட்ட அலுவலக கட்டிடம் திறப்பு விழா

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சீரமைக்கப்பட்டஅலுவலக கட்டிடம் திறப்பு விழா நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார் கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்க நிர்வாகிகள் செல்வராஜ்,ஜெயபாலன்,சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.
சீரமைக்கப்பட்ட கல்லூரி அலுவலக கட்டிடத்தை கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவரும் நகர்மன்ற தலைவருமான ஆர்.எஸ்.ரமேஷ் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
விழாவில் பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன்,கல்லூரி பொருளாளர் எஸ்.எம் கண்ணன்,கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் அருண்,ராஜ்மோகன்,சரவணக்குமார்,தங்கமணி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கல்லூரி பேராசிரியர் விஜயகோபாலன் நன்றி கூறினார்.







