கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி: தமிழ்நாடு, பெங்களூரு, டெல்லி அணிகள் வெற்றி
Oplus_16908288
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் கடந்த 21 ஆம் தேதி முதல் அகில இந்திய ஆக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பிரபலமான 16 அணிகள் பங்கேற்று உள்ளன.

இந்த போட்டியில் 4 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு லீக் போட் டிகள் தற்போது நடை பெற்று வருகிறது.
போட்டியின் 5வது நாள் நடைபெற்ற முதல் போட் டியில் ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அணியும் பெங்ககளூரு ஆக்கி கர்நாடகா அணியும் மோதின. இதில் 3:0 என்ற கோல் கணக்கில் ஆக்கி யூனிட் ஆப் தமிழ் நாடு அணி வெற்றி பெற்றது.
2வதுபோட்டியில்பெங் களூரு சதர்ன் கமெண்ட் அணியும் சென்னை இன் கம் டேக்ஸ் அணியும் மோதின. இதில் 5:3 என்ற கோல் கணக்கில் பெங்களூரு சதர்ன் கமெண்ட் அணி வெற்றி பெற்றது.
3வதுபோட்டியில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணியும்,காம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா மோதின. அணியும் மோதின.இதில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கா மல் போட்டி சம நிலை யில் நிறைவடைந்தது.

4வது போட்டியில், டெல்லி இந்தியன் ஏர்போர்ஸ் அணியும் ஜாம் ஷெட்பூர் நேவல் டாடா ஆக்கி அகாடமி அணியும் மோதின. இதில் 4:2 என்ற கோல் கணக்கில் டெல்லி இந்தி யன் ஏர் போர்ஸ் அணி வெற்றி பெற்றது.







