கோவில்பட்டி அருகே 3 கண்மாய்களில் சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட சரளை கற்கள்; அதிகாரிகள் விசாரணை
Oplus_16908288
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறில் உள்ள கோதண்டராமபேரி கண் மாய் மற்றும் வடக்கு இளந்தைக் குளத்தில் உள்ள கண்மாய், அகி லாண்டபுரம் கிராமத்தில் உள்ள வேலங்குடி கண்மாய் ஆகிய கண்மாய்களில் பெருமளவில் சர கற்கள் சட்டவிரோதமாகவெட்டி எடுக்கப்பட்டது .

இது தொடர்பாக வந்த புகாரை தொடர்ந்து கனிம வளத்துறை அமைச்சர் டி.கே. பிரபு உத்தரவின் பேரில் வருவாய் மற் றும் சுரங்கத்துறை அதிகா ரிகள் 3 கண்மாய்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, அந்தக் கண்மாய்களின் மேற்பரப் பிலிருந்து 1000க்கும் மேற் பட்ட சரக்கு வாகன அள விலான சரளைக் கற்கள் சட்டவிரோதமாகவெட்டி எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்ததது.
அந்த மூன்று கண்மாய்க ளிலிருந்தும் அனுமதி யின்றி எவ்வளவு சரளைக் கற்கள் வெட்டி எடுக்கப் பட்டுள்ளன என்பதன் அளவை மதிப்பிடுவதற் காக, புவியியல் மற்றும் சுரங்கத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உரிய வழிகாட்டுதல்களின்படி, சம்பந்தப்பட்ட வர்களிடமிருந்து பெருந் தொகை அபராதமாக வசூலிக்கப்படும் என்றும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.







