மாலையம்மன் கோவில் கொடை விழா: பக்தர்கள் பால்குட ஊர்வலம்
கோவில்பட்டி மாலையம்மன் கோவில் வைகாசி பொங்கல் பெருந்திருவிழாவை முன்னிட்டு தனுஷ்கோடிபுரம் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் இருந்து 120 பால்குடம் 10 தீர்த்த குடம் சும்ந்து பக்தர்கள் ஊர்வலமாக. மாலையம்மன் கோவில் சென்றடைந்தனர்.

மகேஸ்வரர் சமேத மாலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய சாமி சந்துரு சாமி,முருகன் சாமி குழுவினர் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்கமாரியப்பன் மற்றும் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்,

சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பூபதி மகாலில் அன்னதானம் வழங்கப்பட்டது.







