கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய திருவிழா; மும்மத பிரார்த்தனைகளுடன் புனிதரின் தேர்ப்பவனி

கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய திருவிழா 24- 4 -26 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் மாலை திருப்பலிகள் கலைநிகழ்ச்சிகளுடன் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நேற்று 2-05-26 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஜவஹர்நகர் பங்குதந்தை சகாய ஜான் அடிகளார், கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை அருள்ராஜ் அடிகளார் ,உதவி பங்குத்தந்தை குழந்தைராஜ் அடிகளார் இணைந்து “தூய்மையின் தந்தை புனித சூசையப்பர்” எனும் மறையுரையுடன் திருப்பலி நிறைவேற்றினார்கள்.
இவ்விழாவில் நடைபெற்ற புது நன்மை விழாவில் 53 பிள்ளைகளுக்கு புது நன்மை வழங்கப்பட்டது.இரவு 8 மணிக்கு ஆலயத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மிக்கேல் அதிதூதர், ஆரோக்கிய மாதா, புனித சூசையப்பர் திரு உருவங்கள் வைக்கப்பட்ட வாகனத்தை புனித சூசையப்பர் ஆலய அருட் தந்தையர்கள்,கோவில்பட்டி டவுண் பள்ளிவாசல் இமாம் முகமது ஜமீல் பைஜி, கோவில்பட்டி ஸ்ரீமதி ராதா ராணி கிருஷ்ண பக்த இயக்க திருமடப் பள்ளி ரமேஷ் ஆகியோர்கள் இணைந்து மும்மத பிரார்த்தனைகள் செய்து பவனியை தொடங்கி வைத்தார்கள் .

இப்பவனி ஆலயத்திலிருந்து தொடங்கி சாத்தூர் மெயின் ரோடு ,மாதாங் கோவில் தெரு, எட்டயபுரம் ரோடு, புது ரோடு வழியாக ஆலயம் வந்து சேர்ந்தது. இதில் ஏராளமான இறை மக்கள் ஜெபம் செய்தவாறு கலந்து கொண்டனர்.நிறைவாக இறைமக்கள் அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது







