“இது எங்கள் பூமி” விவசாய கதை புத்தகம் வெளியீடு
Oplus_16908288
கோவில்பட்டி இலக்கியச் சாரல் சார்பாக எழுத்தாளர் கோ.சுரேஷ்குமார் எழுதிய “இது எங்கள் பூமி” என்ற விவசாயம் தொடர்பான 27 கதைகள் கொண்ட புதிய புத்தகம் வெளியீடு விஸ்வாஸ் மற்றும் சிவதாம் கல்வி அறக்கட்டளை யோகா தியான கூட்ட அரங்கில் நடந்தது.

முன்னாள் தலைமை ஆசிரியர் ப. ஜான்கனேஷ் தலைமை தாங்கினார். ஞான ஒளி மலர் முன்னாள் தலைமை ஆசிரியை இந்திராணி, முனைவர் முருக சரஸ்வதி, கவிஞர் இரா.சிவானந்தம், எழுத்தாளர் போத்தி ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
த.மு.எ.ச செயற்குழு உறுப்பினர் பெ.ஜெகநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முதல் புத்தகத்தை வெளியிட்டார்.
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் மேலாளர் பா.சங்கர், தமிழாசிரியை இராதா, கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் ஆகியோர் முதல் புத்தகங்களை பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து வரகவி ஆசிரியர் மா. முருகேசன், பேராசிரியை செல்வம், களத்து மேடு மாத இதழ் முன்னாள்ஆசிரியர் தமிழ் தம்பி, முன்னாள் தபால் துறை ஊழியர் தவமணி, யூ.பி.எம்.எஸ். பள்ளி ஆசிரியர் சந்தன மாரியப்பன், பஞ்அழைத்து, யூனியன் பள்ளி தலைமை ஆசிரியை பேச்சியம்மாள், இலுப்பையூரணி தமிழ் பாப்திஸ்து பள்ளி தலைமை ஆசிரியர் ஶ்ரீதர், பிரமுகர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினார்கள். முடிவில் எழுத்தாளர் கோ.சுரேஷ்குமார் ஏற்புரை வழங்கி நன்றி கூறினார்.







