கோவில்பட்டி மையத்தில் ‘நீட்’ நுழைவுத் தேர்வு;480 பேர் எழுதினர்


2026-27 கல்வியாண்டுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் 22.80 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.

பிற்பகல் 1.30 மணிக்கு மேல் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே மாணவர்கள் முன்னதாகவே வரவும், ஆடை கட்டுப்பாடுகளைப் பின்பற்றவும் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தி இருந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி (480 பேர்), கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (480 பேர்), தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப்பள்ளி (240 பேர்), அரசு பாலிடெக்னிக் கல்லூரி (288 பேர்), தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (480 பேர்) ஆகிய 5 மையங்களில் மொத்தம் 1,968 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர்.

கோவில்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலையிலிருந்து மாணவ மாணவிகள் தேர்வு எழுத ஆர்வமாக காத்திருந்தனர். தீவிர பரிசோதனைக்கு பின்னர் மாணவ மாணவிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.







