கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா; 4 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா 4.5.26 திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அன்றைய தினம் காலை 6 மணிக்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்தலைவர் ஆர். எஸ். ரமேஷ் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மண்டகப்படியாளர்கள், பொதுமக்கள், பெரியோர்கள், மஞ்சள் நீராட்டு இளைஞர்கள் புடைசூழ மங்களப்பொருட்களுடன் திருக்கோவிலுக்கு ஊர்வலமாக வருவார்கள்.

காலை 6மணிக்கு மேல் 7.29 மணிக்குள் தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்படும் கொடியேற்று விழாவில் பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள். கொடியேற்றம் முடிந்தும் பெண்கள் கொடிமரத்துக்கு தண்ணீர் ஊற்றி வழிபடுவார்கள்.
தொடர்ந்து 15-ந் தேதி வரை திருவிழா நடைபெறும்., பத்திரகாளியம்மன் கோவில் விழாக்காலத்தில் தினமும் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும். காலை 9 மணிக்கு :காலை பூஜை ,நண்பகல் 12 மணி, :உச்சிகால பூஜை நடைபெற்று,நண்பகல் 12.05 நடை சாத்தப்படும்.
பின்னர் மாலை மணி 3 மணிக்கு நடை திறக்கப்படும்.மாலை 4 மணிக்கு பூஜை நடக்கும். மாலை மணி 6 மணிக்கு கோவில் முன்புறம் உள்ள .பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் இரவு 7 மணிக்கு பக்தி நிகழ்ச்சி ஆரம்பமாகும். இரவு 7.25 மணிக்கு அம்மன் திருவீதி உலாவிற்கு எழுந்தருளல் இரவு 8.மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் மண்டகப்படிதாரர் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இரவு 10 மணிக்கு அம்மன் திருவீதி உலா முடித்து கோவிலுக்கு திரும்பி வருதல், பைரவர் பூஜை நடைபெறும். மண்டகப்படிதாரர்கள் நிகழ்ச்சிகள் அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் நடைபெறும்.

கோவில் திருவிழா தொடக்கத்தை முன்னிட்டு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன,. கோவில் முன்புறம் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது,
4-ந்தேதி முதல் கோவில்பட்டி திருவிழாக்கோலம் பூண்டு இருக்கும். தினமும் பத்திரகாளி அம்மன் கோவிலில் காலை, மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் மாலையில் கோவில் முன்புற கலையரங்கத்தில் பக்தி நிகழ்ச்சிகள், இரவில் மேளதாளம் முழங்க அம்மன் வீதி உலா, அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் இசை நிகழ்ச்சி என கோவில்பட்டி கலகலப்பாக இருக்கும்.







