காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பணி நிறைவு பாராட்டு விழா
கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற மணிமதிக்கு பணி நிறைவு பாராட்டு விழா ரேவா பிளாசா கூட்ட அரங்கில் நடந்தது.

கூட்டத்திற்கு மகிழ்வோர் மன்ற நிறுவனர் மருத்துவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்,. நாடார் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் முன்னிலை வகித்தார். திருவள்ளுவர் மன்றத் தலைவர் கருத்த பாண்டி, செயலர் நம் சீனிவாசன், பசும்பொன் அறக்கட்டளை தலைவர் பரமசிவம், ஜே டிவி கேபிள்ஸ் இராஜு, முத்தமிழ் மன்ற தலைவர் வரகவி முருகேசன்,
இலக்கியசாரல் தினகரன், கோவில்பட்டி இசை எப்எம் இயக்குனர் சுரேஷ்குமார், மன்ற காப்பாளர்கள் சேர்மத்துரை மற்றும் செல்வின், கம்பன் கழகச் செயலாளர் சரவணச் செல்வன், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி பேராசிரியர் நவநீதன், ஆசிரியர்கள் அருணாச்சலம், கனகராஜ், ஆனந்த், முருக சரஸ்வதி, விநாயாசுந்தரி, கிருஷ்ணன், ராதா செல்வம் உள்பட பலர் கலந்து கண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

முடிவில் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியை மணிமதி ஏற்புரை வழங்கினார்.தொடர்ந்து மகிழ்வோர் மன்ற காப்பாளர் துரைராஜ் நன்றி கூறினார்.







