எட்டயபுரம் தொடக்கபள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்து தொடக்க பள்ளியில் 35 ஆண்டுகள் ஆசிரியர் முதல் தலைமை ஆசிரியர் வரை பணிபுரிந்த லால் பகதூர் கென்னடிக்கு பணி நிறைவு பாராட்டு விழாவும்,பள்ளி ஆண்டு விழாவும் பள்ளி வளாகத்தில் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்,.எட்டயபுரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயண, மூன்னாள் வருவாய் துறை அலுவலர் பொன்.பரமானந்தம்,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மயில்,பள்ளி தாளாளர் சுபாஷ்பாபு சிங்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டவுன் பஞ்சாயத்து .துணைத் தலைவர் கதிர்வேல் அனைவரையும் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை சொர்ணலதா ஆண்டறிக்கை வசித்தார்மாநில பள்ளி கல்வித்துறை தொடக்க கல்வி இயக்குனர் முனைவர் நரேஷ் ,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் லால் பகதூர் கென்னடிக்கு நினைவுப் பரிசு வழங்கி பணி நிறைவு பாராட்டு தெரிவித்தனர்.
கலை இலக்கிய போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. வட்டார கல்வி அலுவலர்கள் சங்கீதா,ராமசுப்பிரமணியன்,பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ரவீந்திரன்,லட்சுமியம்மாள்,செல்வகுமார்,டவுன் பஞ்சாயத்து உறுப்பினர்கள் தங்கம்மாள் கல்லடி வீரன்,ராமர்,ஜெயலட்சுமி,மணிகண்டன்,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட நிர்வாகிகள் செல்வராஜ்,கலை உடையார், உள்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் லால் பகதூர் கென்னடி ஏற்புரை வழங்கினார. பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் அகமது ஜலால் பைஜி நன்றி கூறினார்.







