கோவில்பட்டியில் இலவச ஆக்கி பயிற்சி முகாம்
கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகத்தின் சார்பாக ஆண்டுதோறும் கோடை கால இலவச ஆக்கி பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது
இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது,. வருகிற 30ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.

பயிற்சி முகாமின்போது தினமும் காலையும் மாலையும் கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப் பள்ளி ஆக்கி மைதானத்தில் பயிற்சி முகாம் நடந்து வருகிறது
இன்று காலை இந்திய ஆக்கி வீரர் மாரீஸ்வரன் மற்றும் இந்திய தடகள வீராங்கனை நிவேதிதா ஆகியோர் இளம் வீரர்களுக்கு ஆக்கி நுணுக்கங்ககளை கற்றுக்கொடுத்தார்கள் ,,மேலும் உடல் திறன் வகுப்புகள் எடுத்தார்கள்
80 க்கும் மேற்பட்ட இளம் வீரர்கள் பயிற்சி முகாமில் பங்குபெற்று வருகிறார்கள்.








