தேர்தலை புறக்கணித்த கிராம மக்களுடன் இந்து முன்னணி மாநில நிர்வாகி சந்திப்பு
Oplus_16908288
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே குளத்துள்வாய் பட்டி கிராமத்தில், தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு செய்யாமல் புறக்கணித்த கிராம மக்களை இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி பி ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் வெங்கடேசன்,எட்டையபுரம் நகர தலைவர் மலர் கண்ணன் கோவில்பட்டி நகர தலைவர் சீனிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து தேர்தலை புறக்கணித்தது தவறு என்று கூறி வருத்தம் தெரிவித்தனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இலங்கை அகதிகள் முகாமில் உள்ள சிலர் குளத்துள்வாய்பட்டி கிராமத்தில் உள்ள ஆடு மேய்ப்பவரை கொலை வெறி தாக்குதல் நடத்தியதாகவும் அதற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய மறுத்ததாகவும்அதனை தொடர்ந்து பல பிரச்சனைகள் இருந்து வந்ததால் அரசு அதிகாரிகள் யாரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் இருந்ததாலே இந்த தேர்தலை புறக்கணித்ததாக பொதுமக்கள் கூறினார்கள்
எனவே விரைவில் இந்த பிரச்சினைகளை தீர்த்து சுமூகமான முறையில் தீர்வு காண வேண்டும்.மாவட்ட ஆட்சியரால் மட்டுமே எங்கள் கிராமத்தின் பிரச்சினைகளை சுமூகமாக தீர்க்க முடியும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.








