திருட்டு வழக்கில் 3 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை
Oplus_16908288
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் பாண்டியார்புரம் சுங்கச்சாவடி அருகே தண்ணீர் பந்தல் முதல் அரசடிபனையூர் வழியில் உள்ள ஒரு தனியார் குடோனின் ஷட்டரை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 2,50,000/- மதிப்புள்ள 85 பட்டாணி பருப்பு மூட்டைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கடந்த 2020ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த மாரிச்செல்வம் (35/26), ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த பரமசிவன் (35/26) மற்றும் அந்தோணி ராஜ் (35/26) ஆகிய, 3 பேரைபுதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
மேற்படி வழக்கை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை ஓட்டப்பிடாரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியராஜ்நேற்று (24.04.2026) மேற்படி மாரிச்செல்வம் பரமசிவன் மற்றும் அந்தோணி ராஜ் ஆகியோரை குற்றவாளிகள் என உறுதி செய்து குடோனின் ஷட்டரை உடைத்து உள்ளே சென்றதற்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 2,000/- அபராதமும், குடோனில் வைக்கப்பட்டு இருந்த பட்டாணி மூட்டைகளை திருடியதற்காக தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 2,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுதீர் மற்றும் இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய காவல் ஆய்வாளர் வேல்முருகன், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் திரு. முருகேசன் அவர்களையும், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் தளவாய்ராஜ் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் பாராட்டினார்.







