கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய திருவிழா கொடியேற்றம்

கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய திருவிழா 24- 4 -26 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3- 5- 26 ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும்

திருவிழா கொடியானது பங்குத் தந்தையர் இல்லத்தில் இருந்து இறை மக்கள் கொடியையும், அருட்தந்தைகளையும் பவனியாக அழைத்து வந்தனர். பின் திருவிழா கொடியை சேரன்மகாதேவி பங்குத்தந்தை மரிய பிரான்சிஸ் அடிகளார், இருதயகுளம் பங்குத்தந்தை பாக்கிய செல்வன் அடிகளார், சேந்தமரம் பங்குத்தந்தை சகாய சின்னப்பன் அடிகளார், பாளையங்கோட்டை ஆயர் இல்ல வியாகப்பன் அடிகளார் , கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை அருள்ராஜ் அடிகளார், உதவி பங்கு தந்தை குழந்தைராஜ் அடிகளார் ஆகியோர் இணைந்து திருவிழா கொடியை ஏற்றி வைத்து உலகில் சமாதானம் வேண்டி வெண் புறா பறக்கவிட்டு ஆலயத்தில் ‘கீழ்ப்படிதலின் தந்தை புனித சூசையப்பர் ‘ எனும் மறையுரையுடன் திருப்பலி நிறைவேற்றினார்கள்.
வந்திருந்த இறை மக்கள் அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக 26/4/26 ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் தியானம், 1-5-26 வெள்ளிக்கிழமை நவநாள் திருப்பலி, கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
,2- 5 -26 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு புது நன்மை விழாவும் அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனிதரின் திரு உருவம் வைக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் தேர்ப்பவனி நடக்கிறது.

3 -5 -26 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு ஆலயத்தில் திருப்பலி, உறுதி பூசுதல் விழா நடைபெறும்.
மாலை 6 மணிக்கு ஜான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திருப்பலியும், அங்கிருந்து ஆலயத்திற்கு நற்கருணை பவனியுடன் வந்து கொடியை இறக்கி திருவிழா இனிதே நிறைவு பெறும்.







