கோவில்பட்டியில் வாக்குசாவடிக்கு மணக்கோலத்தில் வந்த 2 ஜோடிகள்; வரிசையில் நின்று வாக்களித்த மணப்பெண்கள்
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 ,மணி வரை நடைபெற்றது. சில வாக்குசாவடிகளில் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
வாக்குபதிவு முடிந்த மாலை 6 ,மணிக்கு வாக்குசாவடியில் இருந்த வாக்கலார்க்ளுகு டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு நடத்தப்பட்டது,. வேலாயுதபுரம் வாக்குச்சாவடி மையத்தில் 66 பேருக்கும், கூசாலிபட்டி வாக்குச்சாவடி மையத்தில் 55 பேருக்கும் டோக்கன் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வாக்கினை செலுத்த அனுமதிக்கப்பட்டனர்
கோவில்பட்டியில் மொத்த வாக்காளர்கள் 231529. இவர்களின் ஆண்கள் 112445 பேர், பெண்கள் 119063 பேர் ஆவார்கள். தொகுதி முழுவதும் 318 வாக்குசாவடி மையங்கள அமைக்கப்பட்டு இருந்தன,.

வாக்குப்பதிவு மிகவும் அமைதியாக நடைபெற்றது,. பெரிய அளவில் எந்தவித சம்பவங்களும் நடைபெறவில்லை. வாக்குபதிவு காலையில் இருந்து விறுவிறுப்பாக இருந்தது,
கோவில்பட்டியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் – ராமலட்சுமி தம்பதியின் மகள் சுவேதராணிக்கும், வள்ளியூர் ராமச்சந்திரன்- காந்திமதி தம்பதியின் மகன் உமா சங்கர் ஆகியோருக்கு இன்று காலை கோவில்பட்டி ஸ்ரீ ராஜ மீரா மஹாலில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த கையோடு மணமகள் சுவேதாரணி மணக் கோலத்துடன் கோவில்பட்டி பூவலிங்க செட்டியார் துவக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார்

இன்னொரு ஜோடி
கோவில்பட்டி வெங்கடேஷ் நகரை சேர்ந்த ரகுபதி மகள் சுதர்சனா என்பவருக்கும், கோவில்பட்டி அருகே உள்ள அழகப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் தியாகராஜனுக்கும் கோவில்பட்டி சௌபாக்கியா திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடைபெற்றது..

மணப்பெண் சுதர்சனா மணமுடிந்த கையோடு மணக்கோலத்தில் கோவில்பட்டி பார்க் சாலையில் உள்ள இலக்குமிஆலை துவக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார்.







