கோவில்பட்டியில் அமைதியான வாக்குப்பதிவு; அதிமுக-திமுக வேட்பாளர்கள் வாக்களித்தனர்

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் இன்று வியாழக்கிழமை காலை 7 மணிக்குய் தொடங்கி வாக்குபதீவு நடைபெற்று வருகிறது. ,மாலை 6 மணியுடன வாக்குப்பதிவு நிறைவடைகிறது,.
கோவில்பட்டியில் அனைத்து வாக்குசாவடிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது,போதும்கக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக் கதமை ஆற்றி வருகிறார்கள் .

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான கடம்பூர் செ. ராஜூ .கடம்பூர் சிதம்பராபுரத்தில் உள்ள இந்து துவக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வா.க்கினை செலுத்தினார்.
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கா. கருணாநிதி கோவில்பட்டி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வக்கீல் பாண்டி கயத்தாறு வாக்குசாவடியில் தந்து வாக்கினை பதிவு செய்தார்.
இதேபோல் தமிழக வெற்றிக் கழக தலைவர் பாலசுப்பிரமணியன், தூத்துக்குடி தொகுதியில் தந்து வாக்கினை செலுத்தினார்,.







