தமிழ்நாடு முழுவதும் விறுவிறுப்பு: மதியம் 1 மணி நிலவரப்படி 56.81 சதவீதம் வாக்குகள் பதிவு
நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளநிலையில், . மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் காலை 11 மணி நிலவரப்படி 37.56 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது,.
மதியம் 1மணி நிலவரம்
மதியம் 1 மணி நிலவரப்படி சராசரியாக 56.81 சதவீதம்… வாக்குகள் பதிவாகி உள்ளது. முன்னதாக 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 39.61 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. (வித்தியாசம்: 16 சதவீதம் அதிகம்)
மதியம் 1 மணி வரை பதிவான வாக்குகள்: 3,25,79,3269
மொத்த வாக்காளர்கள்: 5,73,43,291…
அதிகபட்ச வாக்குகள் பதிவான மாவட்டங்கள்:-
திருப்பூர் – 62.97 சதவீதம்
நாமக்கல் – 62.51 சதவீதம்
ஈரோடு – 61.79 சதவீதம்

சேலம் – 61.42 சதவீதம்
கரூர் – 60.77 சதவீதம்…







